Monday, June 7, 2010

TOURNAMENT RESULTS


அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கப்பட்ட MPL Season-II போட்டிகள் நந்தனம் YMCA A மைதானத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் எட்கர் 2 அணியினர் அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர். இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன.

GROUP A
GROUP A பிரிவில் ஜாவீத் தலைமையிலான EDGAR 3, முத்து கிருஷ்ணன் தலைமையிலான EDGAR 1 மற்றும் சந்தோஷ் தலைமையிலான SUPPORT அணிகள் பங்கேற்றன. கோப்பையை கைப்பற்றும் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்ட ஜாவீத் அணி இரண்டு போட்டிகளிலும் தோற்று தொடரை விட்டு வெளியேறியது அந்த அணிக்கு மட்டும் அல்ல, அனைத்து ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த பிரிவில் சந்தோஷ் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஜாவீத் அணியை விழ்த்திய முத்து கிருஷ்ணன் அணி இந்த பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அரை இறுதி வாய்ப்பை பெற்றனர்.

GROUP B
இந்த பிரிவில் ஸ்டீபன் தலைமையிலான LS அணி, ராஜேஷ் தலைமியிலான ED அணி மற்றும் செல்வா தலைமையிலான எட்கர் 2 அணிகள் பங்கேற்றன. இதில் செல்வா அணி அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இப்பிரிவில் முதலிடம் பிடித்தனர். கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்க பட்ட LS அணி அதிர்ச்சிகரமாக ED அணியிடம் விழ்ந்தனர். முடிவில் செல்வா அணியும் ராஜேஷ் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

அரை இறுதி போட்டிகள்

முதலாவது அரை இறுதி

இந்தப் போட்டியில் ED அணியும் SUPPORT அணியும் மோதின. ED அணியினர் முதலில் BAT செய்து 75 ரன்களை குவித்தனர். அந்த அணியின் BATTING -ஐ போல பந்து வீச்சு அமையவில்ல. SUPPORT அணியினர் இந்த SCORE ஐ மிகவும் எளிதாக CHASE செய்தனர். இந்த அணியின் SANTHOSH, GANESH ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இரண்டாவது அரை இறுதி

எட்கர் 1 மற்றும் எட்கர் 2 அணிகள் மோதினர். இந்த தொடரில் அணைத்து போட்டிகளிலும் டாஸ் வென்ற செல்வா இந்த போட்டியில் மட்டும் டாசில் தோல்வி அடைந்தார். இத்தொடரில் முதலில் BATTING செய்த அணிகள் எல்லாம் தோல்வியை சந்தித்த காரணத்தினால் கேப்டன் முத்து கிருஷ்ணன் டாசில் வென்றவுடன் தமது அணி பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று தெரிவித்தார். அதன் படி செல்வா அணியினர் முதலில் BATTING செய்தனர். முதலில் BATTING செய்து இப்போட்டியில் வென்று சரித்திரத்தை மாற்றுவோம் என்றும் அவர்கள் ஆவேசமாக BATTING செய்தனர்.

அந்த அணிக்கு முத்து குமார் மற்றும் ஜோசப் துவக்க ஆட்ட காரர்களாக களம் இறங்கினார்கள். நல்ல துவக்கத்தை பெற்றவுடன் ஜோசப் அவுட் ஆனார். திடீரென்று அந்த அணியினர் முத்து கிருஷ்ணன் அணியினரின் அனல் கக்கும் வேக பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் விக்கெட்களை மள மள வென்று இழந்தனர். கேப்டன் செல்வா விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டு தடுப்பாட்டம் ஆடினார். அவரது முயற்சி நன்றாக வேலை செய்தது. ஒரு புறம் அவர் மொக்கை போட, மறு புறம் பழனி சூறாவளி போல சுழன்று சுழன்று பந்துகளை விளாசி தள்ளினார். ஒரு கட்டத்தில் ஸ்கோர் 100 ஐ தாண்டும் என்ற நிலை வந்தது. ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனதால் 80 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ரத்தம் சிந்திய ராஜேஷ்

இதை CHASE செய்த முத்து கிருஷ்ணன் அணி செல்வா அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக ரவி ஷங்கர் பந்து வீச்சு அனல் கக்கியது. சூர்யா மற்றும் ராஜேஷும் அற்புதமாக பந்து வீசி தாக்கினர். இறுதியில் முத்து அணியினர் 30 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர். பந்து வீசிய போது ராஜேஷிற்கு முழங்கையில் அடி பட்டு ரத்தம் வழிந்தது. இதனால் அவர் ஒய்வு பெரும் படி மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அணியின் வெற்றியே எனக்கு முக்கியம் எனக் கூறி தொடர்ந்து பந்தை வீசி விக்கெட்களை வீழ்த்தினார்.

எட்கர் 1 தோற்றாலும் எங்களுக்கு கவலை இல்லை. எட்கர் 2 கோப்பையை வெல்ல எங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கேப்டன் முத்து தனது வாழ்த்துகளை எட்கர் 2 அணிக்கு தெரிவித்தார். எட்கர் 1 தோற்றது எங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என்று எட்கர் 2 அணியின் ALL ROUNDER ரவி ஷங்கர் மிகவும் வருந்தினார். இவர்கள் இருவரின் பெருந்தன்மை எட்கர் அணியில் உள்ள அனைவரின் மனதையும் தொட்டது. இது "நீர் அடித்து நீர் விலகாது" மற்றும் "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்" போன்ற பழமொழிகளை நமக்கு நினைவு படுத்தியது.

THE GRAND FINAL

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சந்தோஷ் அணியும் செல்வா அணியும் இத்தொடரில் யாரிடமும் இதற்கு முன் தோற்றதில்லை. இதனால் இறுதி போட்டி இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே நடக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முடிவில் யானைக்கும் பூனைக்கும் நடந்த போட்டியாக முடிந்தது.

இந்த போட்டியை காண இது வரையில் வரலாறு காணாத வகையில் STADIUM நிரம்பி வழிந்தது.

சந்தோஷ் அணி முதல் சுற்று போட்டிகளில் மற்ற இரண்டு எட்கர் அணிகளை வீழ்த்தி இருந்தது. இதனால் இவர்கள் எட்கர் 2 அணியையும் எளிதாக வீழ்த்தி விடலாம் என்று இருந்தனர். ஆனால் மற்ற எட்கர் அணிகள் பெற்ற தோல்வியை SUPPORT அணிக்கு எட்கர் 2 அணி திருப்பிப் பரிசாக கொடுத்தது.

சூறாவளி சூர்யா

இப்போட்டியில் டாசில் வென்ற செல்வா தயக்கம் சிறிதும் இன்றி தமது அணி பந்து வீச்சை தேர்வு செய்கிறது என்று கூறினார். இதனால் முதலில் சந்தோஷ் அணியினர் BATTING செய்தனர். ரவி ஷங்கரும் செல்வாவும் இணைந்து பந்து வீச்சை துவக்கினார்கள். SUPPORT அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் சந்தோஷ் மிகவும் நல்ல FORM இல் இருந்தார். OFF SIDE இல் அவர் அடித்த பந்தை செல்வாவால் தடுக்க முடியவில்லை. அப்பந்து நேராக BOUNDARY க்கு சென்றது. சந்தோஷ் வான வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்க பட்ட நேரத்தில் செல்வா அற்புதமாக FIELDING செய்து சந்தோஷை ரன் அவுட் செய்தார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. சூர்யா அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராஜசேகரும், விருச்சிக காந்த் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரபாவும் இணைந்து அற்புதமாக விளையாடினர். இவர்களை பிரிக்க செல்வா எடுத்த முயற்சிகள் யாவும் பலிக்க வில்லை. இறுதியில் 11 வது ஓவரை சூர்யா வீசிய போது பிரபா போல்ட் ஆனார். இத்துடன் இவர்கள் இன்னிங்க்ஸ் முடிவிற்கு வந்தது. முடிவில் சந்தோஷ் அணியினர் 52 ரன்களை வெற்றி இலக்காக செல்வா அணிக்கு நிர்ணயித்தனர்.

பரவசப்படுத்திய பழனி

52 ரன்கள் எடுத்தால் கோப்பையை கைப்பற்றலாம் என்று எட்கர் 2 அணியினர் மிகவும் RELAXED ஆக இருந்தனர். துவக்க ஆட்டக்காரர்களாக முத்து குமாரும் வினோத்தும் களம் இறங்கினர். முத்து விரைவில் ஆட்டம் இழந்தார். எப்பொழுதும் கடைசியில் களம் இறங்கும் பழனி இந்த முறை ONE DOWN இல் வந்தார். அவர் சுகுமார் வீசிய பந்தில் ஒரே ஓவரில் 3 சிக்ஸர் அடித்து ரசிகர்களை பரவச படுத்தினார். வினோத்தும் தனது பங்கிற்கு இரண்டு பௌண்டரிகளை அடித்து அமர்களபடுத்தினார். இவர்களை பிரிக்க கேப்டன் சந்தோஷ் பல வியூகங்களை பயன் படுத்தியும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 7 அவது ஓவரின் முடிவில் பழனி தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் வெற்றிக்கான ரன்னை எடுத்தும் அந்த அணியினர் மைதானத்தில் சென்று பழனியை அலேக்காக தூக்கி வெற்றியை கொண்டாடினர்.

பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய SUPPORT அணியின் கேப்டன் சந்தோஷ் சாம்பியன் கோப்பையை வெல்ல எட்கர் 2 அணிக்கு அனைத்து தகுதிகளும் உண்டு என்றும் அவர்கள் அனைத்து துறைகளிலும் எங்களை விட சிறந்து விளங்கினார்கள் என்றும் கூறினார்.

செல்வா பேசுகையில் எங்கள் அணி வீரர்கள் இத்தொடரின் துவக்கத்தில் இருந்தே மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக பழனி மிகவும் சிறப்பாக விளையாடினார். நான் பார்த்ததிலேயே அவர் தான் மிகவும் சிறந்த வீரர். இது எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை எங்கள் MANAGER சுமந்த், ரமேஷ், ஸ்ரீதர், பிரகாஷ், ஷமிலா, மற்ற இரு எட்கர் கேப்டன்கள் ஜாவீத் மற்றும் முத்து கிருஷ்ணனுக்கு அற்பணிக்கின்றோம். இந்த வெற்றிக்காக எங்களது பயிற்சியாளர் YUSOOF கடந்த ஒரு ஆண்டாக கடுமையாக முயற்சி செய்தார். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.



MPL போட்டிகளின் சிறப்பம்சம்

* ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இரண்டாவது BATTING செய்த அணியே போட்டியை வென்றது.

* செல்வாவின் எட்கர் 2 அணி மட்டும் இந்த தொடரில் முதலில் விளையாடி வெற்றியை பெற்றது. இந்த வெற்றி அரை இறுதியில் கிடைத்தது.

* கோப்பையை வெல்லும் என எதிர் பார்க்கப்பட்ட அணிகள் இரண்டு. அவை ஸ்டீபன் தலைமையிலான LS மற்றும் ஜாவீத் தலைமையிலான எட்கர் 3 அணிகள். ஆனால் இந்த இரண்டு அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறமால் போட்டியை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்தன

* போட்டியை காண MPL அமைப்பின் தலைவி திருமதி பாமதி பிரகாஷ் நேரில் வந்து ரசிகர்களை உற்ச்சாக படுத்தினார்

* இறுதி போட்டியின் போது VARGHESE அற்புதமாக UMPIRING பார்த்தார்

* இறுதி போட்டியினை காண எட்கர் MANAGERS ஸ்ரீதர், ரமேஷ் மற்றும் MPL VICE PRESIDENT ராஜு நேரில் வந்து இருந்தனர்

* செல்வா அணியின் YUSOOF அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் BATTING செய்ய வரவில்லை. இதனால் இவர்களது அணி மிகவும் சுலபமாக வென்றது

* இவர் துவக்க ஆட்டக்காரராக ஆடிய LS உடனான போட்டியில் எளிதில் ஜெயிக்க வேண்டிய போட்டியை மிகவும் சிரம பட்டு வெல்ல வேண்டியதாயிற்று

* எட்கர் 2 அணி சாம்பியன் பட்டம் வெல்ல YUSOOF முக்கிய காரணமாக இருந்தார். இதனால் இவர் ஆசிய கோப்பை போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெறுவார் என செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. YUSOOF அணியில் இடம் பெற்று அவர் BATTING செய்ய வில்லை எனில் அந்த அணி எளிதில் வெற்றி பெரும் என்பதை யாரோ DHONI க்கும், GARY KIRSTEN க்கும் தெரிவித்து உள்ளனர்

* முத்து கிருஷ்ணன் இப்போட்டி தொடரின் ஆரம்பத்தில் உடல் நலம் குன்றி இருந்தார். இருந்தாலும் அவர் தனது அணியை சிறப்பாக வழி நடத்தி அரை இறுதி வரைக்கும் வர காரணமாக இருந்தார்

* எட்கர் 2 அணியின் ரவி ஷங்கர் அணைத்து போட்டிகளிலும் அற்புதமாக பந்து வீசினார்

* போட்டி துவக்கத்தில் VISA பிரச்சினை காரணமாக போட்டியில் பங்கு பெற முடியுமா முடியாதா என்று இருந்த சூர்யா பாபு கடைசியில் விசா கிடைத்து போட்டியில் பங்கேற்றார்

* அரை இறுதி போட்டியில் ராஜேஷிற்கு கையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. அவர் வலியையும் பொருட்படுத்தாமல் தனது அணி CHAMPIONSHIP வெல்ல ரத்தம் சிந்தி பெரும் பங்காற்றினார்

* இத்தொடரில் இரண்டு SINGH பங்கேற்றனர். அவர்கள் இருவரின் FIELDING உம் அற்புதமாக இருந்தது.

* முத்து அணியினரின் ஜோசப் தான் இத்தொடரில் முதல் சிக்ஸர் அடித்த வீரர்.

* பழனி தான் கடைசியாக சிக்ஸர் அடித்த வீரர். இவர் மட்டும் தான் இறுதி போட்டியில் சிக்ஸர் அடித்தார். சந்தோஷ் அணியில் ஒருவர் கூட சிக்ஸர் அடிக்க வில்லை

* LEAGUE போட்டி ஒன்றில் பழனி தானே பந்து வீசி அற்புதமாக DIVE செய்து CATCH செய்தார். இதை பார்த்த போது SOUTH AFRICA வின் JHONTI RHODES தான் அனைவரது நினைவிற்கும் வந்தார்

* முதல் நாள் போட்டியின் போது மழை அவ்வபோது குறுகிட்டது. அதனால் போட்டிகள் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது

* இறுதி போட்டியின் போது விளையாடிய SUPPORT அணிக்கு SUPPORT செய்ய மைதானத்தில் யாரும் இல்லை. மைதானம் முழுவதும் எட்கர் ரசிகர்களே நிரம்பி இருந்தனர்

* இறுதி போட்டியின் போது BATTING செய்த ராஜ்விந்தர் சிங்கிற்கு மணியில் பந்து பட்டது. இதனால் ஆட்டம் 5 நிமிடம் தடை பட்டது

* இத்தொடரின் துவக்கத்தில் தங்களது அணியே கோப்பையை வெல்லும் என்று YUSOOF கூறி இருந்தார். அவர் சொன்னது போலவே அவரது அணி கோப்பையை கைப்பற்றியது

* இறுதி போட்டி முடிவில் பழனி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்ந்து எடுக்க பட்டார்

* இறுதி போட்டி முடிந்ததும் வெற்றி கேப்டன் செல்வாவிற்கு இந்திய அணியின் முதுகெலும்பு சச்சின் PHONE இல் அழைத்து தனது வாழ்த்துகளை கூறினார்

* சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்கள் அனைவருக்கும் தலா 10 கோடி தருவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

Wednesday, June 2, 2010

MERRILL PREMIER LEAGUE

Most awaited tournament "Merrill Premier League - Season II" will be began on this sunday at YMCA ground. Last week the team owners were very busy in auction to buy valuable players for their team.

This year 6 teams in the contest. These teams are divided into two groups. 3 teams will be in a group. They will meet other two teams. The first two teams of the group will enter semis.

We will see the team details.

Edgar has 3 teams. Javeed, MuthuKrishnan and Selva will lead the teams respectively. The other 3 teams are LS, ED and Admin. Stephen is captain for the defending champion LS team. Rajesh is leading his side ED. Santhosh Kumar is the new captain for Admin team.

All the teams are in practice season during this week. All the teams are very keen to win this year tournament. So we can expect very tough battle in the ground like last year.

Don't miss the excitement. Please visit YMCA ground on this sunday and monday.